தற்போதைய காலத்தில் பெண்களும் சரி ஆண்களும் சரி தங்களின் முகத்தோற்றத்திற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர், இதனால் பல கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.
இது ஆரம்ப காலத்தில் மென்மையான அழகை கொடுத்தாலும் நாள்பட மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் தான் தோல் சுருங்கி வயதான தோற்றம் வரும்.
எனவே இந்த இளமையாக இருக்கும் நேரத்தில் நாம் சருமத்தை வயதான தோற்றம் வராமல் எப்படி அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சரும அழகு
சரும அழகிற்காக பப்பாளியை பயன்படுத்துவார்கள். பப்பாளி பழம் சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் சிறந்த நன்மைகளை தரக்கூடியது.
இது பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறமாக இருப்பதோடு நல்ல சுவையாகவும் இருக்கும்.
இந்த பழத்தில் கருப்பு ஜெலட்டினஸ் விதைகள் உள்ளன. இது தவிர, பப்பாளிப் பழத்தின் மென்மையான, உண்ணக்கூடிய ஆரஞ்சு சதை மிகவும் சத்தானதாகும். இது பலவிதமான சுகாதார நலன்களை நமக்கு வழங்குகிறது.
இதற்கு காரணம் இந்த பழத்தில் இருக்கும் எக்ஸ்ஃபோலியேட்டிங் தான் காரணம். இதை தவிர ஒரு மசித்த பப்பாளியை எடுத்து, அதனுடன் சிறிது கற்றாழை ஜெல்லைக் கலந்து முகத்தில் தடவினால் அது சருமத்தில் துளைகளைத் திறந்து, உங்கள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
இதை செய்வதால் தோலில் ஏற்படும் வயதான தோற்றம் தடுக்கப்டும். முகம் பொலிவுடன் இருக்க வேண்டும் என்றால் பப்பாளியை மசித்து, இரண்டு டேபிள்ஸ்பூன் மில்க் க்ளென்சரைக் கலக்க வேண்டும்.
இது முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெயை அகற்றி முகத்தை பொலிவுடன் காட்டும். இதில் இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்தை எக்ஸ்ஃபாலியேட்டிங் செய்ய உதவுகிறது மற்றும் அடைபட்ட துளைகளை சுத்தம் செய்கிறது.