பொலன்னறுவை, கிம்புலாவல, தியபெதும பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கரடி தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்தவர்கள் தியபெதும பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கரடி தாக்கியதால் , பிரதேசவாசிகள் மிகவும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் மக்களை தாக்கிய கரடியை வேறு பகுதிக்கு எடுத்துச் செல்லதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.