மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த மரியராஜ் சிந்துஜாவின் இறப்பிற்கு நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் (07) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ”மரியராஜ் சிந்துஜாவின் இறப்பு அநியாயமாக கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்த பொழுது விசாரணை நடப்பதாக சொன்னார்கள்.
எங்களைப் பொறுத்தவரை இந்த விசாரணை ஆட்களை மாற்றம் செய்கின்ற விசாரணையாக இருக்க கூடாது. ஒரு நீதியான விசாரணையின் ஊடாக அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.