அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் மூவாயிரம் ரூபா விசேட இடைக்கால கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரச ஊதிய முரண்பாடுகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிசீலனையைத் தொடர்ந்து இந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தேர்தல் முடியும் வரை கொடுப்பனவை வழங்க வேண்டாம் என நேற்று (07) அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
இது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, இது தொடர்பான சுற்றறிக்கையை நேற்று (07) அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த 24ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவையின் விசேட கூட்டத்தில் தற்போது வழங்கப்படும் 2500 ரூபாவுக்கு மேலதிகமாக இடைக்கால கொடுப்பனவாக 5500 ரூபாவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதற்கமைய, தேர்தல் காலத்தில் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும், நலத்திட்டங்களையும் நிறுத்துமாறு தேர்தல் ஆணையத் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.