எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரனை களமிறக்குவதாக சற்று முன்னர் தீர்மானிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தில் தற்போது நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
7 தமிழ் கட்சிகளும் 7 சிவில் அமைப்புகளும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பினூடாக இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடைபெறாவுள்ளமை குறிப்பிடத்தக்கது.