விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் நடிகர் ஜெயம் ரவி முதல் முறையாக டூர் சென்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி
தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்தவர் தான் நடிகர் ஜெயம் ரவி.
இவர் சினிமாவிற்கு வந்த காலம் முதல் யாரையும் போட்டிக்கு இழுத்து கொள்ளாமல் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு தனி வழியில் சென்றுக் கொண்டிருக்கிறார்.
ரவி நடித்த “ஜெயம்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி கண்ட பின்னர் ரொமான்டிக் காதல் காட்சிகள் கொண்ட படங்களில் தேடி தேடி நடித்தார்.
இதனிடையே பிரபல தயாரிப்பாளரான சுஜாதாவின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தற்போது ஆரவ் , அயான் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியினர் விவாகரத்து பெறப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.
இந்த செய்தியை தொடர்ந்து ஜெயம் ரவி பற்றிய பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Brother படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், ஜீனி படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.
விவாகரத்து சர்ச்சைக்கு பின் ஜெயம் ரவி திடீரென கோவாவுக்கு தனியாக டூர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மனைவியுடன் சுற்றித்திரிந்த ஜெயம் ரவி தனியாக சென்று இருக்கிறாரா? என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது.