இந்தியாவின் பீகார் மாநில ஜெகானாபாத் மாவட்டத்தின் கோயில் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 35க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பீகாரின் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள மக்தும்பூர் பகுதியில் பாபா சித்தநாத் கோயிலில் இந்த சம்பவம் இன்று (12.08.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
திடீரென ஏற்பட்ட நெரிசல்
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட நெரிசலின் போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
எனினும், இந்தியாவில் இது போன்ற சம்பவங்கள் பொதுவானவையாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.