எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், இன்று (12) முற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வேட்பாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்.
தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்கள் சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.