2024 பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தால் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை மொத்தம் 37 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான காலம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.