இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த 18 வயதான விஷ்மி குணரத்ன தனது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சாதனையை பதிவு செய்துள்ளார்.
பெல்ஃபாஸ்டில் அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது.
குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 260 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் விஷ்மி குணரத்ன அதிகபட்சமாக 101 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
இதுவரை இலங்கை மகளிர் அணிக்காக சமரி அத்தபத்து மாத்திரமே சதங்களை பெற்றுக் கொண்டுத்திருந்தார்.
இந்த நிலையில், சமரிக்கு அத்தபத்து அடுத்ததாக இலங்கை மகளிர் அணிக்காக சதமடித்த இரண்டாவது பெண் என்ற சாதனையை விஷ்மி படைத்துள்ளார்.
மேலும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சதம் அடித்த இளம் இலங்கை வீராங்கனை என்ற சாதனையையும் விஷ்மி படைத்துள்ளார்.