சிவப்பு நிறத்தில் உள்ள பழங்கள் நமக்கு என்னென்ன நன்மைகளை அளிக்கின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சிவப்பு நிற பழங்கள்
அதிகமான சத்துக்களைக் கொண்ட மாதுளையில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகமாக உள்ளதுடன், புற்றுநோய் மற்றும் இதய நோய் ஆகியவற்றினை தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்று கூறப்படுகின்றது.
இதே போன்று வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள ஸ்ட்ராபெர்ரி பழத்தினை உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்.
நார்ச்சத்து அதிகம் கொண்ட ஆப்பிள் பழத்திலும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக இருக்கின்றது. இவை எடையைக் குறைப்பதற்கு சிறந்த தெரிவாக இருக்கின்றது.
மேலும் சிவப்பு நிறத்தினைக் கொண்ட செர்ரி பழங்கள் ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைப்பதற்கு உதவுவதுகின்றது.
தர்பூசணி பழமானது கெட்ட கொழுப்பினை குறைக்கவும் உதவுகின்றது. பிளம்ஸ் பழத்திலும் தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகின்றது.