இத்தாலியின் சிசிலி கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 06 பேர் காணாமல் போனதில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியக் கொடியுடன் பயணித்த 56 மீற்றர் நீளமான கப்பலில் 22 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட சூறாவளியே இந்த விபத்திற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பலில் பயணித்தவர்களில் இலங்கையர் ஒருவரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பிரித்தானிய, அமெரிக்க மற்றும் கனேடிய பிரஜைகள் அடங்கிய குழுவொன்று சொகுசு படகில் பயணித்துள்ளதுடன், விபத்தில் உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
காணாமல் போன 06 பேரை தேடும் பணியை கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.