கொழும்பு புறநகர்ப் பகுதியில் மசாஜ் விடுதி ஒன்றில், கணவரை பிரிந்து வேலை செய்து வந்த முல்லைத்தீவு 34 வயதான குடும்பப் பெண் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
முல்லைத்தீவு முறுகண்டிப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய். கிளிநொச்சியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய நிலையில் குடும்பப் பெண் கூடுதலாக பணம் சம்பாதிக்கலாம் என கணவரிடம் கூறி கட்டுநாயக்கா பகுதியில் உள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
சேவை பெறச்சென்ற கணவன்
6 மாதங்கள் அங்கு வேலை புரிந்து வந்த குறித்த குடும்பப் பெண் பின்னர் கணவருடன் தொடர்பு கொள்வதை தவிர்த்து வந்ததாகத் தெரியவருகின்றது.
இது தொடர்பாக விசாரிப்பதற்காக குறித்த ஆடைத் தொழிற்சாலைக்கு சென்ற கணவர் அங்கு மனைவி 3 மாத காலமாக வேலைக்கு வரவே இல்லை என்பதை அறிந்துள்ளார்.
அதன் பின் மனைவியுடன் ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்து வந்த இன்னொரு பெண் மூலம் மனைவி எங்கு சென்றுள்ளார் என்பதை அறிந்துள்ளார்.
அதன் பின்னர் கொழும்பு புறநகர்ப் பகுதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த மசாஜ் மற்றும் விபச்சார விடுக்கு தன்னை ஒரு வாடிக்கையாளராக அடையாளம் காட்டி உள்ளே சென்றுள்ளார்.
அங்கு நின்ற பெண்களுடன் தனது மனைவியும் நிற்பதைக் கண்டு கடும் கோபத்தில் மனைவியை கடுமையாகத் தாக்கத் தொடங்கியுள்ளார்.
இந் நிலையில் குறித்த விடுதியில் பணியாற்றிய ஆண் ஊழியர்கள் கணவனை கடுமையாகத் தாக்கியதாகத் தெரிவருகின்றது.
காயங்களுக்குள்ளான கணவன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதே நேரம் தன்னை கணவன் தாக்கியதாக கூறி மனைவியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.