அரகலய போராட்டத்தை நிர்மாணித்தவர்களில் ஜனாதிபதி ரணிலும் ஒருவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிஸ்டம் ச்சேஞ்ச் என்ற முறைமை மாற்றத்தைக் கோரி போராடிய இளைஞர்கள் இன்னும் வீதிகளிலேயே இருக்கிறார்கள்.
அரகலயவில் ஈடுபட்ட ஒரு பிரிவினர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்புபட்டிருக்கிறார்கள்.
அவரது செயற்பாடுகளைப் பார்க்கும் போது, அவரும் அரகலய போராட்டத்தின் சூத்திரதாரிகளில் ஒருவர் எனவே நிரூபணமாகிறது என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்காகச் செய்ய வேண்டிய வேலைத்திட்டங்கள் இருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.



















