முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை (Keheliya Rambukwella) விளக்கமறியலில் வைக்குமாறு கோரி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிற்கு ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
குறித்த கால அவகாசம் இன்றையதினம் (21.08.2024) வழங்கப்பட்டுள்ளது.
இந்த மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிசங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
அதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்ததாக சந்தேகத்தின் பேரில் கெஹலிய கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.