வெல்லவாய பகுதியில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்த நான்கு சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.
காப்பகத்தில் இருந்த 16,14 மற்றும் 15 வயதுடைய நான்கு சிறுவர்களே காணாமல் போயுள்ளனர்.
குறித்த நான்கு சிறுவர்களும் யாரிடமும் சொல்லாமல் சிறுவர் காப்பகத்திலிருந்து வெளியே சென்றுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.