நாம் நமது சருமத்திற்கு பல அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவோம். இதில் கெமிக்கல்கள் நிரம்பி இருப்பதால் அது நமது சருமத்தை பாதிக்கும். இதற்காக இயற்கையில் காணப்படும் மூலிகைகளை பயன்படுத்தலாம்.
அதில் ஒன்று ஆவாரம்பூ. இந்த ஆவாரம்பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்து சாப்பிடலாம். கொதிக்க வைத்து குடிக்கலாம். ஆயுள்வேதத்தில் பல நன்மைகளுடன் இது காணப்படுகின்றது.
இதை நமது முன்னோர்கள் பயன்படுத்தும் போது அவர்கள் அரோக்கியமாக இருந்தார்கள். பெண்கள் தற்காலத்தை விட கடந்த காலத்திலேயே அழகாகவும் கவர்ச்சியாகவும் இருப்பார்கள்.
இவர்கள் பயன்படுத்திய பொருட்களை நாம் இப்போது பயன்படுத்துவது எந்த தவறும் இல்லை. இந்த பதிவில் ஆவாரம் பூ சரும அழகிற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ர்க்கலாம்.
ஆவாரம் பூ
நமது சருமம் என்றும் பொலிவுடன் இருக்க ஆவாரம் பூவை உலர வைத்து பொடி செய்து வெதுவெதுப்பான நீரில் பொடியை சேர்த்து தேனுடன் கலந்து மூலிகை தேநீராக்கி குடிக்கலாம்.
இது சருமத்தை ஒரு நல்ல அழகான நிறத்திற்கு கொண்டு வரும். வசந்த காலத்தில் நமக்கு ஏற்படும் தாகத்தை தணித்து உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளலாம். இதற்கு ஆவாரம் பூ பொடி, பனங்கருப்பட்டி, ஏலக்காய் விதைகள் சேர்த்து பானமாக்கி குடிக்கலாம். இதற்கு தேனும் அளவாக பயன்படுத்தலாம்.
இந்த பொடியை பாசிப்பயறு மாவு மற்றும் கடலை மாவில் கலந்து விடவும். இதில் பன்னீர் சேர்த்து குழைத்து சருமத்தில் பயன்படுத்தி வந்தால் சருமம் ரோஜா நிறம் போல் ஜொலிக்கும் இது பல ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
சிறுநீர் சம்பந்நப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் இதனுடைய வேரிலிருந்து தயாரிக்கப்படும் சாறு இயற்கை டையூரிடிக் ஆக செயல்பட்டு சிறுநீரகத்தை பாதுகாக்கிறது. இதை தவிர காய்ச்சல் ஆவாரம் பூக்களை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குடித்துவருவதன் மூலம் காய்ச்சல் குறையும்.
சருமத்தில் நமக்கு தெரியாமலும் நாம் செய்யும் தவறினாலும் பல காயங்கள் வந்து அதன் தழும்புகள் அப்படியே இருக்கும். இது சருமத்தை அசிங்கமாக காட்டும். இதற்கு ஆவாரம் பூ வேர் மற்றும் இலைகளை நீரில் கொதிக்க வைத்து இளஞ்சூடாக இருக்கும் போது காயத்தை கழுவி வந்தால் காயம் விரைவில் ஆறும்.
சருமத்தில் வீக்கம் இருந்தால் பட்டை தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைக்கப்பட்டு சுத்தம் செய்து வந்தால் படிப்படியாக வீக்கம் குறைவதோடு தழும்புகளும் மாறும்.
தலையில் பொடுகு பிரச்சனை இருப்பவாகள் ஆவாரம் பூ பொடி, வெந்தயப்பொடி மற்றும் கற்றாழை ஜெல் மூன்றையும் சரிசமமாக கலந்து உச்சந்தலையில் தடவி விடவும் 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை ஷாம்பு கொண்டு அலசி எடுத்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.
இது தவிர இதன் விதைகளை எடுத்து கரிசலாங்கண்ணி இலைகள் சேர்த்த எண்ணெய் இளநரை பிரச்சனைக்கு உதவும். இப்படி பல்வேறு மருத்துவ குணங்களை தனக்குள் கொண்டுள்ள இந்த பூவை யாரும் கண்டகொள்ள மாட்டார்கள். எனவே இப்போதில் இருந்து பயன்படுத்தி பாருங்கள்.