வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – பாலைநகர் பகுதியில் இன்று வியாழக்கிழமை (22) காலை யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த யுவதி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
யுவதி உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில், யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பிலான , மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.