கண்டி , ரங்கல , உடிஸ்பத்துவ பிரதேசத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கியிருந்த பிரித்தானியப் பிரஜை ஒருவர் பாம்பு தீண்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
55 வயதுடைய பிரித்தானியப் பிரஜை ஒருவரே பாம்பு தீண்டியுள்ளது.
குறித்த நபர் அடுக்கு மாடி குடியிருப்பின் தோட்டத்தில் இயற்கையை இரசித்த படி நடந்து சென்று கொண்டிருக்கும் போது பாம்பு தீண்டியதை அடுத்து, தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் உடல் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.