வட மாகாண வைத்தியசாலையில் பணியாற்றும் 41 மருத்துவர்கள் கா.பொ.த உயர்தரத்தில் சித்தியடையவில்லை என சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகின்றது.
மன்னார் மற்றும் வவுனியா அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் 41 வைத்தியர்கள் உயர்தரத்தில் மூன்றுபாட சித்தி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் தகுதிகள் கேள்விக்குறி?
மருத்துவக் கொலைகள் இடம்பெற்ற மன்னார் மற்றும் வவுனியா அரச வைத்தியசாலை மருத்துவர்கள் தகுதிகள் கேள்விக்குறியாகி உள்ளதாக சமூக ஊடகங்களில் விசனம் வெளியிடப்பட்டிருந்தது.
வடமாகாண சுகாதார திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு வழங்கப்பட்ட தகவலூஉடாகவே 41 மருத்துவர்கள் உயர்தர பரீட்சையில் சித்தியடையவில்லை என சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய தகவல் பகிரப்பட்டு வருகின்றது.