அனுர குமார திசாநாயக்காவின் கட்சி உறுப்பினர் ஒருவரை வாளினால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் குறித்து சஜித் பிரேமதாச கட்சியின் ஆதரவாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சம்பவ தினத்தன்று, ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் ஒருவர் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ள நிலையில் வீட்டிலிருந்த பூந்தொட்டிகளை உடைத்து வாளினால் தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, காயமடைந்தவர் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது ஒரு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.