வவுனியா முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரி சங்க தலைவருமான செ.அரவிந்தன் 6 மாதக்காலமாக சிறையில் இருக்கும் நிலையில் விடுதலைக்காக சிறைக்குள்ளே கடந்த 8 நாட்களாக உன்னாவிரதம் இருந்து போராடி வருகின்றார்.
இந்த விடயத்தை எந்த ஒரு ஊடகங்களும் சக போராளிகளும் கூட சமூகங்களுக்கு வெளிகாட்டாது மூடி மறைத்துள்ளதாக குரல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், தன்னுடைய போராட்டத்திற்காக தானே போரடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
4 மாத சிறையில் இருந்தும் ஒரு தமிழ் சட்டத்தரணி கூட முன் வரவில்லை. என்னுடைய மக்களுக்கு சுபிட்சமான வாழ்வுக்கு 100 ஆண்டு கூட நான் சிறையில் இருப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேல் நீதி மன்றத்தில் கூட சென்று என்னுடைய விடுதலையை பெற உதவுமாறு கேட்டு இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.