நம் எல்லோருக்கும் பச்சை பட்டாணி என்பது சுவைக்காக போடும் ஒரு உணவு என்றே தெரியும். இந்த பச்சை பட்டாணியை தொர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் பல ஆரோக்கிய நன்மைகளை தரும் என உங்களுக்கு தெரியுமா?
பச்சை பட்டாணி சாப்பிடுவதால் என்னென்ன நன்மை கிடைக்க போகின்றது என நாம் இங்கு பார்ப்போம்.
குடல் ஆரோக்கியத்திற்கு உதவும்
குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது, இது அவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது மற்றும் ஆரோக்கியமற்ற பாக்டீரியாக்கள் அதிகமாகப் பெருகுவதைத் தடுக்கிறது
உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கம்
இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்க உதவியாக இருக்கும், இது இதய நோய்க்கான முக்கிய ஆபத்து காரணியாகும்.
இதய ஆரோக்கியத்திற்கு உதவும்
பச்சை பட்டாணியில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற இதய ஆரோக்கியமான தாதுக்கள் போதுமான அளவு உள்ளன இதய நோய்க்கான முக்கிய ஆபத்து காரணியாகும்
மூளை பலம் பெறும்
வளரும் குழந்தைகள், மருந்து போல் தினமும் மூன்று தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் மூளை பலம் பெறும்.
மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்
பச்சைப் பட்டாணியில் பாஸ்பரஸ் காணப்படுகிறது. இதனால் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 100 கிராம் பச்சைப் பட்டாணி சுண்டல் சாப்பிட்டால் அவர்கள் விரைவில் குணமடைவார்கள்.