அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் மெல்போர்னில் தீயிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பெற்றோருடன் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
தற்காலிக விசாவில் சுமார் 11 வருடங்களாக அந்த நாட்டில் தங்கியிருந்த அவர், முன்னதாக புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்த போதிலும் அது நிராகரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை அவர் தனக்கு தானே தீவைத்து கொண்டநிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.