யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழா, இன்று காலை இடம்பெற்றது.
பல்லாயிர கணக்காண பக்தர்களின் விண்னதிர்ந்த அரோகரா கோக்ஷத்துடன் அலன்கார கந்தனாம் நல்லூர் கந்தன் தேரிபவனி வந்து தன்னை நாடிவந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நல்லூர் மகோற்சவ திருவிழாவினால் யாழ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது அதோடு கந்தனின் அழகை கண்குளிர காண்பதற்கு புலம்பெயர் பக்தர்கள் பெருமளவில் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்,
நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழா கடந்த ஓகஸ்ட் 9 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
25 ஆம் திருவிழாவான நாளை திங்கட்கிழமை காலை 6.15 மணிக்குத் தீர்த்த உற்சவம் இடம்பெறும். மாலை 4.30 மணிக்குக் கொடியிறக்கத்துடன் பெருந்திருவிழா நிறைவு பெறும்.