அடுத்த வருடம் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10 அரச துறைகளைச் சார்ந்த ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி அலுவலக உதவியாளர்கள், சாரதிகள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், கதிரியக்க நிபுணர்கள் மற்றும் மருந்தாளுனர்கள், செவிலியர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் சம்பளங்கள் இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கமைய தரம் III அலுவலக உதவியாளரின் மாதாந்த சம்பளம் 5450 ரூபாவினாலும், தரம் II அலுவலக உதவியாளரின் மாதாந்த சம்பளம் 8,760 ரூபாவினாலும், தரம் I அலுவலக உதவியாளரின் மாதாந்த சம்பளம் 10,950 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன் தரம் III சாரதியின் சம்பளம் 6,960 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், தரம் II சாரதியின் சம்பளம் 9,990 ரூபாவினாலும், தரம் I சாரதியின் சம்பளம் 13,020 ரூபாவினாலும் சிறப்பு தர ஓட்டுநருக்கு 16,340 ரூபா சம்பளமும் அதிகரிக்கப்படவுள்ளது.
தரம் III சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்/விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்களுக்கு 8,340 ரூபாவும், தரம் II உதவியாளர்களுக்கு 11,690 ரூபாவும் தரம் I உதவியாளர்களுக்கு 15,685 ரூபா சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.
முகாமைத்துவ உதவியாளரின் மாதச் சம்பளம் தரம் IIIக்கு 10,140 ரூபாவும், தரம் IIக்கு 13,490 ரூபாவும், தரம் Iக்கு 17,550 ரூபாவும் அதிகரிக்கப்படவுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தரம் III, II மற்றும் Iக்கு முறையே 12,710 ரூபா, 17,820 ரூபா, 25,150 ரூபா சம்பளமும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.