சிங்கப்பூர் (singapore)கோல்டன் மைல் டவரில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு சிவில் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.
கோல்டன் மைல் டவர் – கடற்கரை சாலையில் உள்ள அலுவலகம் மற்றும் வணிக வளாகத்தில் சனிக்கிழமை (ஓகஸ்ட் 31) பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
“பல வாகனங்கள் தீ”
பிற்பகல் 2.30 மணிக்கு ஒரு முகநூல் பதிவில், சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) இந்தச் சம்பவத்தை “பல வாகனங்கள் தீ” என்று விவரித்துள்ளது
மதியம் 12.50 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளது. எனினும் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் சனிக்கிழமை தீ அணைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.