தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணத்தில் இன்று (03) வெளியிடப்பட்டது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்ப் பொதுவேட்பாளராக பாக்கியசெல்வம் அரியநேத்திரன் போட்டியிடுகின்றார்.
தென்னிலங்கை வேட்பாளர்களை நிராகரித்து, தமிழ் பொதுவேட்பாளர் ஊடாக தமிழர்கள் தேர்தலை எதிர்கொள்வதற்கான அவசியம், புறநிலை, முக்கியத்துவம் என்பவற்றையும் தமிழர்கள் தேசமாக தமது நிலைப்பாடு, அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் பொது வேட்பாளராக அரியநேந்திரனின் தேர்தல் விஞ்ஞாபனம் அமையப்பெற்றுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் பொது வேட்பாளரின் அலுவலகத்தில் வைத்து வெளியிடப்படது. இந்நிகழ்வில் பொதுக்கட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.