கிளிநொச்சியில் பொதுமகனிடம் இலஞ்சம் வாங்க முற்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி விவேகானந்தா நகர் பகுதியைச் சேர்ந்த நபர் செவ்வாய்க்கிழமை (03) மேற்கொண்ட சந்தேகநபர்கள் தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளார்.
அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் இவ்வாறு இருவரையும் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார். குறித்த பொதுமகனிடமிருந்து 5,000 ரூபா பணம் பெற இருவரும் முயற்சித்துள்ளனர்.
இது தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், குறித்த இருவரையும் நேற்று முதல் பணியிலிருந்து இடைநிறுத்துமாறும் பொலிஸ் அத்தியட்சகர் உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதேசமயம் பணியிடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் இருவரும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.