நீண்ட நாட்களாக சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் விநியோகம் செய்து வந்த அரச உத்தியோகற்தர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை சாய்ந்தமருது பிரதான வீதியில் வைத்து நேற்று (3)கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த நபர் சம்மாந்துறை பகுதியில் உள்ள கல்வி திணைக்களத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
43 வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேகநபரிடமிருந்து 25 கிராம் ஐஸ் போதைப்பொருளினை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றி இருந்தனர்.
அத்துடன் சந்தேக நபர் . மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு மற்றும் சான்றுப்பொருட்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.