இலங்கையில் , புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்குள் நாட்டுக்கு கிடைக்கும் என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி 50,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் முதல் தொகுதி எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கையில் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
கடவுச்சீட்டு நெருக்கடிக்கு தீர்வு
அதேவேளை கடவுச்சீட்டு வழங்குவதில் தற்போது நிலவும் கடவுச்சீட்டு நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதுவரை வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் தினசரி வழங்கல் 1000 ஆக இருக்க வேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் தற்போது, திணைக்களத்தில் சுமார் 30,000 வெளிநாட்டு பாஸ்போர்ட் வெற்று புத்தகங்கள் உள்ளன என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்காக வந்துள்ள மக்கள் குடிவரவு பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்ற நிலையில் , இந்த தகவல் வெளியாகியுள்ளது.