பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கிய நீதிபடி இந்த குணங்களைக் கொண்ட ஒரு நபர் எப்போதும் புத்திசாலி என்று அழைக்கப்படுகிறார். ஒரு அறிவாளி எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறார்.
அந்த வகையில் சமூகத்தில் ஒருவர் மதிக்கப்பட வேண்டும் என்றால் அவர்கள் என்னென்ன விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியரின் தத்துவங்கள்
1. பொதுவாக வாழ்க்கையில் சோதனைகள் நிறைந்திருக்கும் சமயத்தில் தங்களை கட்டுபடுத்தி கொள்பவரே புத்திசாலியாக பார்க்கப்படுகிறார். ஏனென்றால், நெருக்கடியான நேரங்களில் எடுக்கப்படும் அவசர முடிவுகள் உங்களை சிக்கலில் மாட்டிவிடும். எனவே எவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்நிலையிலும் அமைதியாக இருக்க வேண்டும்.
2. சாணக்கியரின் கொள்கையின்படி, ஒரு நபர் எப்போதும் தவறுகளிலிருந்து விலகி இருப்பது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லமு. இப்படி விலகி இருப்பவர்களை சிறந்த புத்திமான் என்பார்கள். சர்ச்சைகளில் இருந்து விலகி இருப்பதால் மதிப்பு அதிகரிக்கிறது. நீங்கள் உங்களை அறிவாளியாக காட்டிக் கொள்ள விரும்பினால் எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் இருங்கள்.
3. ஒருவரின் எதிர்காலத் திட்டங்களை ரகசியமாக வைத்திருப்பவர்தான் புத்திசாலி என்று சாணக்கியர் கூறுகிறார். எதிர்கால திட்டங்களை வெளியில் கூறாமல் இருப்பது நல்லது . இப்படி கூறாமல் இருந்தால் உங்கள் திட்டங்கள் விரைவில் கைக்கூடும்.
4. எப்பொழுதும் தனது இலக்கை அடைவதற்காக உழைத்து கொண்டிருப்பவர்கள் அறிவாளியாக இருப்பார்கள். நேரம் அல்லது சூழ்நிலைகள் மீது எப்போதும் கவனம் செலுத்தும் ஒருவர் இலக்குகளை அடைய அவ்வளவு நேரம் எடுக்காது.
5. ஆன்மீகப் பாதையில் செல்லும் ஒரு நபர் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். இந்த குணத்தை அறிவாளிகளிடம் இருக்கும் முக்கிய குணமாக பார்க்கப்படுகிறது. வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்றால் இறைவன் துணை நிச்சயமாக தேவை.
6. எல்லா தடைகளையும் கடக்கும் திறன் ஒரு நபரை அறிவாளியாக காட்டும் என சாணக்கியர் கூறுகிறார். தனது பணிகளை முடிப்பதில் எந்த தடைகளுக்கும் பயப்படாமல் தொடர்ந்து இலக்கை நோக்கி நடந்து கொண்டிருப்பவர்கள் புத்திசாலியாகிறார்கள். அப்படிப்பட்டவருக்கு லட்சுமி தேவியின் அருள் எப்போதும் இருக்கும்.