சிறந்த கேமரா அமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மிட்ரேன்ஜ், பிளாக்ஷிப் ஸ்மார்ட் போன்களை பலரும் வாங்குவதற்கு விரும்பி வருகின்றனர். தற்போது வரும் முன்னணி ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலானவற்றில் பிளாக்ஷிப்-காலிபர் கேமராக்கள் கொண்டு வருகின்றது.
இது மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களின் சந்தை எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது என்பதை நன்றாகவே காட்டுகின்றது. சிறந்த கேமரா அமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க விரும்புகிறீர்களா? தற்போது 50 ஆயிரத்திற்கு குறைவான விலையில் சிறந்த கேமரா அமைப்பைக் கொண்ட போன்களை பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. இதன் பிரைமரி கேமரா 13MP அல்ட்ராவைடு லென்ஸைக் கொண்டுள்ளது. 10MP 3x டெலிஃபோட்டோ சென்சார் ஆகிய மூன்று கேமராக்கள் உள்ளன.
குவாட்-பிக்சல் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோஃபோகஸ் ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999 ஆகும்.
இந்த விவோ ஸ்மார்ட்போனில் 50MP கேமராக்கள் நான்கு உள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட பிரைமரி சென்சார், 2x ஆப்டிகல் மற்றும் 50x டிஜிட்டல் ஜூம் கொண்ட போர்ட்ரெய்ட் லென்ஸ், அல்ட்ராவைட் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது.
செல்பி மற்றும் வீடியோ கால் அழைப்புகளுக்கும் 50MP கேமராவைக் கொண்டுள்ள இதன் விலையானது ரூ.49,999 ஆகும்.
சியோமி14 CIVI ஸ்மார்ட்போனில் லைகாவுடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட சம்மிலக்ஸ் லென்ஸுடன் மூன்று பின்புற கேமராவை கொண்டுள்ளது.
இதில் OIS உடன் 50MP பிரைமரி கேமரா, 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP டெலிஃபோட்டோ சென்சார் கேமரா மற்றும் 12MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் ஷூட்டர் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக இரண்டு 32MP கேமராக்கள் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலையானது ரூ.47,999 ஆகும்.
ரியல்மீ GT 6 ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமராவை கொண்டுள்ளது. இதில் OIS உடன் 50MP பிரைமரி ஷூட்டர், 50MP 2x டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 8MP அல்ட்ராவைட் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 32MP சோனி IMX615 கேமரா கொண்டுள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.40,000 ஆகும்.