விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ளது. இதனால் அனைவரும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தயாராகி வருகின்றனர். மக்கள் தற்போதே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான பொருட்களை சேகரிக்க துவங்கி விட்டனர்.
வீட்டை சுத்தம் செய்வது, அலங்கரிப்பது, பூஜைக்கான பந்தல் தயார் செய்வது என எத்தனை தான் செய்தாலும், அவற்றை விட மிக முக்கியமானது விநாயகர் சிலை வாங்குவது தான்.
விநாயகர் சிலை வாங்குவது துவங்கு, மீண்டும் விநாயகர் சிலையை எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வரை அனைத்தும் கொண்டாட்டம் தான்.
பொருள்
நாம் தேர்வு செய்யும் விநாயகர் சிலையானது இயற்கை சார்ந்த பொருளால் ஆனதாக, உதாரணத்திற்கு களிமண், மரம், கல் போன்ற பொருட்களால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். பிளாஸ்டிக் உள்ளிட்ட மற்ற பொருட்களால் ஆன விநாயகர் சிலையை வைத்து வழிபட்டால் அது எதிர்மறை ஆற்றல்களை ஈர்ப்பிதாக அமைந்து விடும்
அதே போல் இயற்கையுடன் தொடர்புடைய நிறங்களில் இருக்கும் விநாயகர் சிலையை தேர்வு செய்து வாங்க வேண்டும். குறிப்பாக மஞ்சள், பிரெளன் போன்ற நிறங்களைக் கொண்ட விநாயகர் சிலையை மிகவும் ஏற்றதாகும். ரசாயன நிறங்கள் கலந்த விநாயர் சிலையை வாங்குவது வீட்டில் தீய சக்திகளின் நடமாட்டத்தை அதிக்க செய்யும். பாரம்பரிய நிறங்களில் ஆன விநாயகர் சிலை மட்டுமே வீட்டில் மங்கலங்களையும், செல்வ வளத்தையும் உருவாக்கும்.
துதிக்கை திசை
விநாயகர் சிலை வாங்கும் போதும் முக்கியமாக கவனிக்க வேண்டியது விநாயகரின் சிலை எந்த திசையை நோக்கி இருக்கிறது என்பதை தான். விநாயகரின் துதிக்கை எப்போது இடது பக்கம் திரும்பியதாக தான் இருக்க வேண்டும். அதுவே வீட்டில் செல்வத்தையும், நல்ல விஷங்களை உருவாக்கும். வலது பக்கம் துதிக்கை இருப்பது போன்ற சிலையை வாங்கினால் தீமைகளும், தடைகளும் அதிகம் நடக்கும்.
சிலையின் அளவு
விநாயகர் சிலையின் அளவானது நீங்கள் அமைத்திருக்கும் பூஜை இடத்திற்கு ஏற்ற அளவாக இருக்க வேண்டும். மிகப் பெரிய அல்லது மிகச் சிறிய விநாயகர் சிலைகளை வாங்கி வைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் வீட்டில் நல்ல ஆற்றல்கள் என்பது நிலையாக இருப்பது தடைபடும்.
விநாயகரின் கை
விநாயகர் சிலையில் அவரது கை அபய முத்திரை காட்டியதாகவோ ஆசீர்வாதம் வழங்குவதை போலவோ அல்லது வரத முத்திரை (பாதுகாக்கும் அமைப்பு) கொண்டதாகவோ இருக்க வேண்டும். முத்திரைகள் தெய்வீக பலத்தையும், ஆசியையும், பாதுகாப்பையும் தருவதாகும்.
விநாயகர் கண்கள்
விநாயகர் சிலையில் உள்ள கண்கள் அவரது முகத்திற்கு சரியாக பொருந்துவதாக இருக்க வேண்டும். மிகப் பெரியதாகவோ, சிறியதாகவோ இருக்கக் கூடாது. சரியாக பொருந்தி இருக்கும் கண்கள் மட்டுமே நிலையான, சரியான ஆசிகளையும், குடும்பத்தில் ஒற்றையையும் விநாயகரின் அருளையும் நிறைந்திருக்க செய்யும்.