யாழ்ப்பாணத்தில் இருந்து மதுரைக்கு வாரத்தின் ஏழு நாட்களும் விமான சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நடவடிக்கையானது இலங்கை விமான சேவை அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளன.
இதற்காக இந்தியாவிலிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கை விமான சேவை அமைச்சகத்தால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
மதுரை – கொழும்பு இடையே முதல் சர்வதேச விமான சேவை கடந்த செப்டம்பர் 2012ல் இடம்பெற்று வருகின்றது.
தற்போது மதுரையிலிருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவையை இன்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் வழங்கி வருகிறது.
இந்நிலையில், செப்டம்பர் 1ம் திகதியிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.