இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் பொது தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு நேற்றைய தினம் (04) ஆரம்பமாகி இன்றும் இடம்பெற்று வருகின்றது.
தபால் மூல வாக்களிப்பிற்கு என அடையாளப்படுத்தப்பட்டுள்ள அரச திணைக்களங்களில் இன்றைய தினம் (5) காலை தொடக்கம் அரச உத்தியோகத்தர்கள் தபால் மூல வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தை பொறுத்த வரையில் அதிகாலை தொடக்கம் வாக்கு பதிவுகள் மந்த கதியில் இடம் பெற்று வருவதுடன் அரச அதிகாரிகள் வாக்களிப்பில் ஆர்வம் இல்லாமல் காணப்படும் நிலை அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தகுதி உள்ள வாக்காளர்கள் அனைவரும் தபால் வாக்களிப்பில் கலந்து கொண்டு வாக்களிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.