மன்னார்- முருங்கன் நானாட்டான் பிரதேசத்தில் மதுபானம் அருந்தி உந்துருளி செலுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவமானது நேற்று (06) நானாட்டான் சுற்றுவட்ட சந்தியில் இடம்பெற்றது. கைதானவர்கள் அரிப்பு துறை மற்றும் நானாட்டான் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் இருவரும் குடும்பஸ்தர்கள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முருங்கன் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.



















