இலங்கைக்கு மிக நெருங்கிய அண்டை நாடான இந்தியாவில் ஒருவருக்குக் குரங்கு காய்ச்சல் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடு சென்று நாடு திரும்பிய நபரொருவருக்கே குரங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டதையடுத்து அவர் நேற்றையதினம் (08-09-2024) தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் குரங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.