ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூடத்தில் சஜித் மனைவி ஜலனி பிரேமதாச கலந்துகொண்டிருந்தார்.
இந்நிலையில் அந்த பிரச்சார கூடத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சி பாடல்போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்டிய கில்மிசாவும் கலந்துகொண்டிருந்தார்.
அந்த பாடல் போட்டியில் பங்கு பற்றியதன் மூலம் யாழ்ப்பாணத்தை சேர்த கில்மிசா மக்களிடையே பிரபலமானார்.
அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க யாழ்ப்பாணம் விஜயம் செய்தபோது கில்மிசாவை சந்தித்து பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் வரும் 21 ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் , அனல்பறக்கும் பிரச்சார பணிகளை வேட்பாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.