பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (12) கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று (11) பிணை வழங்கி உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில், கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பில் அவர் இன்று (12) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதையடுத்து, கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மூன்றாம் திகதி மற்றும் 25 ஆம் திகதிகளில் மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.