இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், தனது வெற்றி உறுதியாகி உள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் பரப்புரை கூட்டங்களில் அடுத்த தனது அரசாங்கம் எவ்வாறு செயற்படும் என்ற வகையில் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்.
இந்நிலையில் மற்றவர்களை பாதிக்காத வகையில், தனது வெற்றிக் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தப் போவதாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 22ஆம் திகதி தனது தேர்தல் வெற்றி குறித்து கருத்து வெளியிட்டவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இனம், மதம் என்பது அரசியல் மேடையில் விற்கப்படும் ஒன்றாக இருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் பரப்புரை கூட்டங்களில் அதிகளவான மக்கள் கலந்து கொள்வதாக புகைப்படங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டாலும், அது பெருந்தொகை பஸ்களால் வேறு இடங்களில் இருந்து அழைத்து வருபவர்கள் என சுட்டிக்காட்டப்படுகிறது.
இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.