தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்நோக்கும் பாரிய சவாலானது இலங்கையின் அதிக கடன் சுமையே என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க(Patali Champika Ranawaka )சுட்டிக்காட்டியுள்ளார்.
2022ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வெளிநாட்டுக் கடனின் அளவு 11 பில்லியன் டொலர்கள் என்றும் தற்போது அது 28 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட பலதரப்புக் கடன்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
தேசிய மக்கள் சக்தி எதிர்நோக்கியுள்ள பாரிய சவால்! | Npp Government Faces A Massive Challenge
“சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் பிரகாரம் தற்போதுள்ள பொருளாதார நிலைமையை பேணுவதுடன், தாங்கள் வாக்குறுதியளித்த நலன்புரி உறுதிமொழிப் பத்திரத்தை நிறைவேற்றுவது அரசாங்கம் எதிர்கொள்ளும் மற்றுமொரு சவாலாகும்.
மக்கள் விரும்பும் ‘மாற்றத்தை’ புதிய அரசால் ஏற்படுத்த முடியுமா?”
இலங்கையின் செலுத்தப்படாத கடன் மீதான வட்டி 8 பில்லியன் டொலர்களை தாண்டியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி எதிர்நோக்கியுள்ள பாரிய சவால்! | Npp Government Faces A Massive Challenge
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பிறகு, முந்தைய அரசாங்கம், குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மாற்றப் பாடுபடுவோம் என்று அறிவித்தது.
ஆனால் அவர்கள் ஒப்பந்தம் மற்றும் பொருளாதாரக் கொள்கை வேலைத்திட்டத்தையே தொடர்கின்றனர்’’ என்றார்.