யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி மேற்கு பகுதியில் கடந்த 4 ஆம் திகதி குளவிக்கொட்டுக்கு இலக்கான இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உடல்கூற்று பரிசோதனை
சிறுப்பிட்டி மேற்கு பகுதியைச் சேர்ந்த நவரத்தினம் கேதீஸ்வரன் (வயது – 35) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.
குறித்த இளைஞன் தனது வாகனத்தில் நித்திரையில் இருந்தபோது குளவி கொட்டியுள்ளது.
வலி தாங்கமுடியாமல் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சடலம் உடல்கூற்று சோதனையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.