காலி ஹாலிவல பிரதேசத்தில் ஜனாதிபதி வேட்பாளரொருவருக்கு ஆதரவாக நடைபெற்ற பிரசாரக் கூட்டத்திற்கு வந்திருந்த குழுவினருக்கு உணவு தயாரித்து கொடுத்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைதாகியுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளாலும் பொலிஸாராலும் கைது செய்யப்பட்டதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்
சம்பவத்தில் காலி, ஹலிவல, ஹில்சைட் பகுதியில் வசிக்கும் 48 வயதுடைய சாரதி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 331 உணவுப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.