திருகோணமலை (Trincomalee) மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக ஜனாப் ஃபயாஸ் ரசாக்கும் (Janap Fayas Rasak) பிரதம நீதிவான் நீதிமன்ற நீதவானாக ஜீவராணி கருப்பையாவும் இன்று சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
குறித்த சத்தியபிரமாணங்கள், இன்று (13.09.2024) மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் செய்து கொள்ளப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா நேற்றைய தினம் (12.09.2024) நீதிச்சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்திற்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.