ஜெயம் ரவி ஆர்த்தியின் விவாகரத்து முடிவிற்கு ஆர்த்தியின் பேஸ் நண்பன் தான் காரணம் என்று பயில்வான் ரங்கநாதன் தனது பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோவில் பேசி இருக்கிறார்.
பயில்வான் தகவல்
ஜெயம் ரவி 2009-ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன.
இதனால், ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜெயம்ரவியுடன் எடுத்த அனைத்து போட்டோக்களையும் டெலிட் செய்தார். இதனால் இணையத்தில் பரவி வந்த விவாகரத்து குறித்த வெளியான செய்திகளுக்கும் பதில் அளிக்காமல் இருவரும் மௌனமாக இருந்தனர்.
ஜெயம் ரவி விவாகரத்து குறித்து தற்போது தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு ஆர்த்தி மறுப்பு தெரிவித்து இது என்னுடைய சம்மதம் இல்லாமல் எடுக்கப்பட்டது என கூறியுள்ளார்.
இந்த நிலையில பயில்வான் ரங்கநாதன் இது பற்றி கூறியுள்ளார். அவர் கூறும் போது ‘ஆர்த்தி அழகானவர், நிறைய இயக்குநர்கள் அவரை நடிக்க வைக்க விரும்பினார்கள். ஆனால் ஆர்த்தி மறுத்துவிட்டார்.
அவர் அழகாக இருந்தது தான் ஜெயம் ரவியின் சந்தேகத்திற்கு காரணம். அதே போல ஆர்த்தி ஒரு நடிகர் ஒருவருடன் பேஸ்புக்கில் பேசி கொண்டு இருந்தார். இது ஜெயம் ரவிக்கு தெரியவந்ததால், இருவருக்கும் இடையே சண்டை வந்தது.
பின் ஆர்த்தி, ஜெயம் ரவியிடம் பேசி அதை சரி செய்துவிட்டார். அதற்கும் ஜெயம்ரவியின் இந்த முடிவுக்கும் சம்மந்தம் இல்லை’ என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.