முல்லைத்தீவில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் காலை (15-09-2024) இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போது இந்த விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற சாரதி இருவரும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 45 வயது மதிக்கதக்க பெண், சிவநகரை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞனுமே காயங்களுக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.