வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் உற்சவம் இன்று(16)காலை இடம்பெற்ற நிலையில், கடலென பக்தர்கள் கலந்துகொண்டு வல்லிபுர ஆழ்வாரின் அருளை பெற்றனர்.
காலை 7 மணியிலிருந்து விசேட பூசைகள் இடம்பெற்று தொடர்ந்து வசந்த மண்ட பூசை இடம் பெற்றது.
தொடர்ந்து 9:30 மணியளவில் வல்லிபுரத்து ஆழ்வார் ஆஞ்சநேயர் முன்னே வர தொடர்ந்து விநாயகரும் அவரை தொடர்ந்து மகாலக்ஷ்மியும் தொடர்ந்து வர வல்லிபுரத்து சக்கரத்து ஆழ்வார் பெருந் தேரில் வலம் வந்தார்.
பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் புடைசூழ, அடியார்கள் தூக்கு காவடி, அங்க பிரதஸ்டை, பால்குடம் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றி இருந்தனர்.