கனடாவின் பண வீக்கம் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட உள்ளது.
கனடாவின் பணவீக்க நிலைமை தொடர்பில் மகிழ்ச்சியான எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் பணவீக்கமானது 2.1 வீதம் அளவில் குறைவடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்திற்கான பணவீக்கமானது இவ்வாறு வீழ்ச்சி அடைந்திருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவல்களை வரும் செவ்வாய்க்கிழமை வெளியிட உள்ளது.
கடந்த ஜூலை மாதம் வருடாந்த பணவீக்க வீதம் 2.5 ஆக காணப்பட்டது.
இந்த பணவீக்கமானது ஆகஸ்ட் மாதத்தில் 2.1 வீதமாக வீழ்ச்சி அடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பொருளியல் நிபுணர்களின் இந்த எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் நகர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
பணவீக்க வீதம் குறைவடையும் சந்தர்ப்பத்தில் வட்டி விகிதங்களை குறைக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.