நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்த்லில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயம் முன்மொழியப்பட்டவுடன் பல்வேறு சேறுபூசல் விடயங்கள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.பிரதி பொலிஸ்மா அதிபரால் பாதுகாப்பு அசச்சுருத்தல் தொடர்பில் தனக்கு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு பதில் வாங்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் எனக்கான பாதுகாப்பு என்பது தமிழ் மக்களே எனவும் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
தான் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியதில் இருந்து சமூக ஊடகங்களில் முறையாற்றவிதமான கருத்துக்களை கொண்டு தனது பெயரை சித்தரிக்கின்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார்.